'ஆம் ஆத்மி மாடல்; தவெகவுக்கு 2 கோடி ஓட்டு இருக்கு! – தவெகவின் 'பலே' கணக்கு!

Spread the love

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியவை.

நிர்மல் குமார்
நிர்மல் குமார்

அவர் பேசியதாவது, ‘1977 யைப் போல 2026 லும் ஆட்சிமாற்றம் ஏற்படும். சமீபத்தில் திமுகவுக்காக வேலை செய்பவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘உங்களுக்கு (தவெக) எவ்வளவு வாக்கு கிடைக்கும்?’ என்றார். ‘நீங்களே சொல்லுங்கள். எங்களுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது?’ என்றேன். அவர், ‘வீட்டுக்கு ஒரு வாக்கு இருக்கிறது’ என்றார்.

தமிழ்நாட்டில் 2.25 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளது. வீட்டுக்கு ஒரு ஓட்டு என 2 கோடி வாக்குகள் கிடைத்தாலும் நமக்கு 40% க்கும் மேல் வாக்கு கிடைத்துவிடும். கரூர் சம்பவத்தின் போது தலைவர் தவித்த தவிப்பை எங்களால் மறக்கவே முடியாது. ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்தியாவுக்கே முன்னுதாரணமான அரசாக 2026 இல் ஒரு அரசு அமையும்’ என்றார்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பேசியதாவது, ”விசில் எப்போது அடிப்பார்கள். போட்டியில் எதாவது தவறு நடக்கையில்தான் விசில் அடிப்பார்கள். இந்த ஆட்சியில் ஊழல் செய்வது யார்? தவறு செய்வது யார்? இங்கே முதல்வர் ஸ்டாலினே தவறு செய்யத்தான் செய்கிறார்? உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு பொறுப்பு டிஜிபியை கூட அவர் நியமிக்கவில்லையே. தமிழகத்தில் கஞ்சாவே இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களும் தவெகவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் மனதை வென்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி மக்களை விட தமிழக மக்களுக்கு அரசியல் அறிவு குறைவா? மக்கள் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நம்முடைய செயல்பாடுகளை அவர்களிடம் சரியாக எடுத்துச் சென்றால் வென்றுவிடலாம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *