‘ஆரண்ய காண்டம்’ மூலம் என் சினிமா பயணத்தை ஆரம்பித்து வைத்தவர் குமாரராஜா தான் – ‘ குரு சோமசுந்தரம் | actor guru somasundaram share about aaranyakandam memories because of rerelease

Spread the love

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக இன்றும் கொண்டாடப்படும் படமான “ஆரண்ய காண்டம்’ மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது. 2011ல் வெளியான இப்படம் ப்ளாக் காமெடி ஜானராகவும் பெயரை அள்ளியது.

‘ஆரண்ய காண்டம்’ மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் எடிட்டர் பிரவீனுக்குக் கிடைத்திருக்கிறது. தெற்காசிய சர்வதேசத் திரைவிழாவில் கிராண்ட் ஜூரி விருதையும் வென்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

ஆரண்ய காண்டம்

ஆரண்ய காண்டம்

ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலைப் பின்னல்களே ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் கதை லைன். இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், சம்பத், யாஷ்மின் பொன்னப்பா எனக் கதைக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். படம் வெளியான போது, இதில் ஜமீன்தார் காளையாக வருகிற குரு சோமசுந்தரமும், அவரது பையனாக வரும் வசந்த்தும் தமிழ் சினிமாவுக்குப் பிரமாதமான வரவுகள் என்று கொண்டாடப்பட்டனர்.

இப்படத்தின் நினைவலைகள் குறித்து குரு சோமந்தரத்திடம் பேசினோம்.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள்.

“’ஆரண்ய காண்டம்’ படத்தின் கதை, நடிப்பு, வசனம், திரைக்கதை என எல்லாமே சரிவிகிதமான கலவையாகக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கும். அதனாலேயே ஒரு கிளாசிக் லெவல்ல போயிடுச்சு. நாடகத்துறையிலிருந்த எனக்கு சினிமாவுக்கு என்னை அழைச்சிட்டு வந்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *