ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!

dinamani2Fimport2F20202F122F102Foriginal2FCrime Against Women
Spread the love

கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் எட்டு நாள்களாகியும், குற்றவாளி பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி எந்தப் பக்கம் தப்பிச் சென்றார் என்று தெரியாமல் உள்ளது. அவர் ஹிந்தியில் பேசியதாக சிறுமி கொடுத்த தகவலின் பேரில் அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்திலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும், ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி காவலர்கள் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு சிறப்பு மருத்துவக் குழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயவியல் மற்றும் நரம்பியல் மருத்துவர்களும் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையை கவனித்து வருகிறார்கள். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி முடித்து வீடு திரும்பிய 4ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, சிசிடிவி கேமராவில் சிக்கியிருக்கும் நிலையில், அதனைக் கொண்டு தேடும் பணி நடந்து வருகிறது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமியை மா்ம நபா் பின் தொடா்ந்து சென்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *