ஆரோவில்லில் பொங்கல் விழா: வெளிநாட்டவர் பங்கேற்று உற்சாக கொண்டாட்டம்! | Pongal festival in Auroville Foreigners participate

1346994.jpg
Spread the love

Last Updated : 14 Jan, 2025 03:12 PM

Published : 14 Jan 2025 03:12 PM
Last Updated : 14 Jan 2025 03:12 PM

புதுச்சேரி: ஆரோவில்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கலிட்டு கும்மியடித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் விழா இன்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மண்பானையில் பொங்கலிட்டு இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பாரம்பாரிய கலாச்சாரப் பொங்கல் விழாவானது ஆரோவில் அறக்கட்டளை சார்பாக ஆரோவிலுள்ள மோகனம் கலாச்சார பண்பாட்டு மையத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமான வெளிநாட்டினர் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கலிடும் போது பொங்கல் பானையைச் சுற்றி வந்து கும்மி அடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லர் கம்பம் கயிறு ஏறுதல், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றதை வெளிநாட்டினர் உற்சாகமாக கைதட்டி கண்டு ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *