மழையால் பாதித்த பயிற்சி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், மழையால் அந்த அணிகளின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது நாளை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளுக்குமான பயிற்சி இன்று (மார்ச் 21) மாலை 5 மணிக்கு திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் இரு அணிகளுக்குமான பயிற்சி பாதிக்கப்பட்டது. ஆடுகளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முழுவதுமாக மூடப்பட்டது.