முதலிரண்டு போட்டிகளில் நாங்கள் நல்ல பிட்ச்சுகள் வேண்டுமெனக் கேட்டோம். ஆனால், இப்படி பேட்டிங் ஆடவே கடினமாக இருக்குமாறு தந்துவிட்டார்கள்.
அதனால், எங்களால் என்ன சிறப்பாக செயல்பட முடியுமோ அதைச் செய்தோம். ஆனால், நாங்கள் சின்னசாமி பிட்ச் மேற்பார்வையாளரிடம் இது குறித்து பேசுவோம். அவர் தனது வேலையை சிறப்பாக செய்வாரென நம்புகிறோம்.
இந்த பிட்ச் பேட்டர்களுக்கு அவ்வளவாக உதவவே இல்லை. இது மிகவும் சவாலான பிட்ச். நாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் இதுதான் நிலைமை.
முதல் நான்கு ஓவரிலிருந்து 13ஆவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். பேட்டிங்கில் நாங்கள் தடுமாறினோம். இருந்தும் ஓரளவுக்கு நல்ல இலக்கை நிர்ணயித்தோம்.
தில்லி அணி 50/4 என இருந்தார்கள். தூரல் இன்னமும் பேட்டிங்கிற்கு எளிமையாக்கியது என்றார்.