நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர்.
மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த துயரமான சம்பவத்தையடுத்து, கர்நாடக அரசு மற்றும் அம்மாநில காவல்துறை மீது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!