மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்களை, துறைவாரியான நடவடிக்கைகள் என நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்ற தகவல்களை யார் வேண்டுமானாலும் கேட்டு அறிந்துகொள்ள வழி வகை செய்வதே தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
இந்தச் சட்டத்தின் கீழ், பதிவு செய்த குடிமக்கள், மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கு ஆன்லைன் மூலமே கேள்வி எழுப்பி தகவல்களைப் பெற முடியும்.
1. ஆர்டிஐ தகவல்களைப் பெற ஏற்படுத்தப்பட்ட https://rtionline.gov.in/ இணையதளத்துக்குள் செல்லவும்.
2. முதல் முறையாக இணையதளத்துக்கு செல்பவராக இருந்தால், உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
3. பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் சில விவரங்களை உள்ளீட்டு உங்களுக்கான கணக்கைத் தொடங்கலாம்.
4. பிறகு, நீங்கள் எழுப்ப வேண்டிய கேள்வி யாருக்கு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. அமைச்சகமா? துறையா? நீதிமன்றம் போன்றவையா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6. பிறகு, ஆன்லைன் ஆர்டிஐ விண்ணப்பத்தில் நீங்கள் கேட்கும் கேள்வியை பதிவு செய்யவும்.
7. எந்த விவரத்தைக் கேட்கிறோம் என்பதை தெளிவாக உள்ளிடுவது மிகவும் அவசியம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பும்போது, 3000 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் எழுத்துகளும் எண்கள், சிறப்பு எழுத்துகளான – _ ( ) / @ : & \ % போன்றவை மட்டுமே இடம்பெறலாம்.