அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற ஏப்ரல் 21 அன்று முதல் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 14) தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ஏப்ரல் 21 அன்று தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.