ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு | State Information Commissioner directs officials says RTI response must be transparent

1373003
Spread the love

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் தொடர்பாக அனைத்​துத் துறை அதி​காரி​களுக்​கான விழிப்​புணர்வு பயிற்சி முகாம் ஊட்​டி​யில் உள்ள ஆட்சியர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் லட்சுமி பவ்யா முன்​னிலை வகித்தார். மாநில தகவல் ஆணை​யர்​கள் பிரியகு​மார், இளம்​பரி​தி, நடேசன் தலைமை வகித்​தனர்.

முகாமில் தமிழ்​நாடு தகவல் அறி​யும் உரிமை சட்ட தகவல் ஆணை​யர் பிரியகு​மார் பேசி​ய​தாவது: தகவல் அறி​யும் உரிமை சட்​டம் குறித்து பொது​மக்​களிடையே அதிக அளவில் விழிப்​புணர்வு உள்​ளது. முன்பு குறை​வான அளவு மனுக்​கள் மட்​டுமே இச்​சட்​டத்​தின் கீழ் பெறப்​பட்​டன. தற்​போது பல்​வேறு துறை​களி​லிருந்து அதிக அளவில் மனுக்​கள் பெறப்​படு​கி்ன்​றன.

மனு​தா​ரர்​களிடம் இருந்து வரும் மனுக்​கள் மீது உடனடி​யாக விசா​ரணை மேற்​கொள்ளுமாறு பொது தகவல் அலு​வலர்​களுக்கு அறிவுரை வழங்​கப்​பட்டு வரு​கிறது. குறிப்​பிட்ட காலத்​துக்​குள் மனுக்​கள் மீது பதில் அளிக்​காத பொது தகவல் அதி​காரி​கள் மீது நடடிக்கை மேற்​கொள்​ள​வும், சட்​டத்​தில் வழி​வகை உள்​ளது.

எனவே மனு​தா​ரர் அளிக்​கும் மனுவை நன்​றாக படித்து சரி​யான பதிலை மனு​தா​ரருக்கு 30 நாட்​களுக்​குள் தர வேண்​டும். நீங்​கள் அளிக்​கும் பதில்​கள் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *