நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
கடைசியாக தமிழில் வெளியான காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் ஆர்யா. தற்போது சந்தானம் படத்தினை தயாரித்து வருகிறார்.
தற்போது மலையாள, தமிழ், மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். லூசிபர், எமபுரான் படத்துக்கு கதை எழுதிய முரளி கோபி எழுதியுள்ள இந்தப் படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
இந்தப் படத்தினை மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இதன் பூஜை இன்று (ஆக.7) ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
பூஜை புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் நிஹிலா விமல் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான குரூவாயூர் அம்பளநடையில் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் வாழை படத்திலும் நடித்துள்ளார்.
Our Production No.14 @ministudiosllp has officially begun with an auspicious pooja in Ramanathapuram today!
Excited to have the charming talent @arya_offl on board.
Directed by @JiyenKrishna, from the writer of the glorious 'Lucifer' and 'Empuraan' – #MuraliGopi. pic.twitter.com/kEIzww7QIc
— Mini Studios LLP (@ministudiosllp) August 7, 2024