ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார் | R Nallakannu Centenary cm Stalin releases special book by hindu tamil thisai

1372855
Spread the love

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் பெரியார், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் குறித்து சிறப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்​நூலை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வெளி​யிட்​டார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் வி.வெங்​கடேஸ்​வரன் ஆகியோர் நூலின் பிர​தி​களைப் பெற்​றுக் கொண்​டனர். இந்த நிகழ்​வில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில துணைச் செய​லா​ளர் நா.பெரிய​சாமி, ‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகத்​தின் பொறுப்​பாசிரியர் வி.தேவ​தாசன், தலைமை நிருபர் கி.கணேஷ், விற்​பனை மேலா​ளர் எஸ்​.இன்​ப​ராஜ் ஆகியோர் பங்​கேற்​றனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மகா​ராஷ்டிரா ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களின் கட்​டுரைகள் இந்​நூலில் இடம்​பெற்​றுள்​ளன. இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், உலகத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறன், ஆர்​.நல்​ல​கண்ணு மற்​றும் அவரது குடும்ப உறுப்​பினர்​களு​டன் நடத்​தப்​பட்ட நேர்​காணல்​கள் இந்​நூலில் உள்​ளன.

மேலும், மூத்த பத்​திரி​கை​யாளர்கள் சாய்​நாத், ப.திரு​மாவேலன், பேராசிரியர்​கள் ஆ.சிவசுப்​பிரமணி​யன், பொன்​னீலன், அ.கா.பெரு​மாள், வீ.அரசு, இரா.​காம​ராசு, கவிஞர் யுக​பாரதி மற்​றும் பல்​வேறு துறை ஆளு​மை​கள் கூறி​யுள்ள நல்​ல​கண்ணு தொடர்​பான அரிய தகவல்கள் நூலில் இடம்​பெற்​றுள்​ளன.

மொத்​தம் 480 பக்​கங்​களைக் கொண்ட இந்​நூலின் விலை ரூ.500. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை முன்​பதிவு செய்​பவர்​களுக்கு 20 சதவீதம் கழி​வுடன் சிறப்பு சலுகை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் நூலின் விலையான ரூ.500க்கு பதில் ரூ.400 மட்​டும் செலுத்தி நூலைப் பெற்​றுக் கொள்​ளலாம். தபால் செலவை பதிப்​பகம் ஏற்​றுக்​கொள்​ளும்.

‘இந்து தமிழ் திசை’ பதிப்​பகத்​தின் store.hindutamil.in/publications என்ற இணைய முகவரியில் முன்ப​திவு செய்​ய​லாம். மேலும், இந்​தியா​வுக்​குள் நூல்​களை அஞ்​சல் அல்​லது கூரியர் மூலம் பெறு​வதற்​கு, ‘KSL MEDIA LIMITED’ என்ற பெயரில் டிடி, மணி​யார்​டர் அல்​லது காசோலை​யை, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், கஸ்​தூரி மையம், 124, ​வாலாஜா சாலை, சென்னை – 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்​டும். புத்​தகத்தை பெற முகவரி மற்​றும் கைபேசி எண்ணை அவசி​யம் குறிப்​பிட வேண்​டும். மேலும் விவரங்​களுக்​கு 74012996562, 7401329402 என்​ற எண்​களில்​ தொடர்​பு ​கொள்​ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *