ஆற்றில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி

River Accident
Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் அருகே ரந்தோலி என்ற இடத்தில் இன்று(15-ந்தேதி)காலை டெம்போ டிராவலர் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. டிரைவர் உள்பட மொத்தம் 23 பேர் அதில் பயணம்செய்தனர்.

வேன் கவிழ்ந்தது

1627977 Untitled 14

ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அந்த வேன் டெல்லியில் இருந்து உத்ரகாண்ட் மாநிலம் சோப்தா துங்கநாத் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது டிவைரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் சுமார் 200 அடி பள்ளத்தில் உருண்டது. மேலும் அந்த வேன் அந்த பள்ளத்தாங்கில் ஓடும் அலக்நந்தா நதியில் விழுந்தது.

12 பேர் பலி

இந்த விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. அதில் இருந்த 12 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். அவர்கள் வேன் விபத்தில் பள்ளத்தாக்கில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Rudraprayag Accident
7 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

விபத்து தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். டிரைவரின் அதிவேகமே விபத்துக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுபற்றி விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் பலியான சில பயணிகள் டெல்லி என்.சி.ஆர்.பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Accident In Uttarakhand

இரங்கல்

விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஸ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.மத்திய மந்திரி அமித்ஷாவெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நடந்த விபத்து அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Accident Rudraprayag

இதையும் படியுங்கள்:

ஜாதி மறுப்பு திருமணம்; மார்க்.கம்யூனிஸ்டு அலுவலகம் சூறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *