இதன் தொடர்ச்சியாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,
‘அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
ஆகவே, ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.