தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அதன் பின், “ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது… தேசிய கீதத்திற்கு மரியாதை தரவில்லை’ என்று தமிழ்நாடு அரசின் மீது நீண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்றைய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு.
அப்போது அவர் கூறியதாவது…
“ஜனநாயக முறைப்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தோம். இன்று அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை வாசியுங்கள் என்று கூறியது தவறில்லையே. சபையின் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்தோம்.
சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தயார் செய்து தரும் உரையைத்தான் ஜனாதிபதி படிக்கிறார். அப்படித்தான் இங்கேயும் தமிழ்நாடு அரசு தயார் செய்து தரும் உரையைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறோம்.
ஆக, நாடாளுமன்றத்தில் என்ன தவறு நடக்கிறதோ, இங்கேயும் அதே தவறுதான் நடக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் இப்படி வெளியேற முடியுமா?