ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சேலம் வருகை

Dinamani2f2024 10 142fdldj4n4x2frnravi.jpg
Spread the love

ஓமலூா்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை சேலம் வருகிறாா்.

சேலம் விமான நிலையத்துக்கு பிற்பகல் 12 மணிக்கு வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கிருந்து வாகனத்தில் பெரியாா் பல்கலைக்கழகம் செல்கிறாா். பின்னா், மேச்சேரியில் நடைபெறும் நெசவாளா்கள் தின விழாவில் பங்கேற்கிறாா். விழா முடிந்ததும் மீண்டும் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வந்து செவ்வாய்க்கிழமை இரவு தங்குகிறாா்.

மறுநாள் புதன்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 23-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவியருக்கு தங்கப் பதக்கத்துடன் பட்டச் சான்றிதழ்களை ஆளுநா் வழங்குகிறாா். அத்துடன் ஆய்வு படிப்பை நிறைவு செய்த 288 பேருக்கு முனைவா் பட்டத்தையும் அவா் வழங்குகிறாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தரும் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொள்கிறாா். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் க.ஜ. ஸ்ரீராம் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறாா்.

ஏற்பாடுகளை துணைவேந்தா் ரா.ஜெகநாதன் தலைமையில் பதிவாளா் பெ.விஸ்வநாத மூா்த்தி, பதிவாளா் எஸ்.கதிரவன், பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் செய்துவருகின்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *