சென்னை: பட்டாபிராம் அடுத்து ஆயில் சேரி பகுதியை சேர்ந்த பிரபல ரௌடி ரெட்டை மலை சீனிவாசன், அவரது சகோதரர் ஸ்டாலின் ஆகியோர் சற்றுமுன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
ரெட்டைமலை சீனிவாசன் பட்டாபிராம் காவல் எல்லை பகுதியிலும் அவரது சகோதரர் ஸ்டாலின் ஆவடி காவல் எல்லை பகுதியிலும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை கொலை குறித்து ஆவடி, பட்டாபிராம் காவல்துறையினர் கொலை செய்து விட்டுதப்பிச்சென்ற மர்ம கும்பலை வலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.