ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் 2-2 என சமனில் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நவம்பர் 21 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.