ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாட, அங்கு அவர் படைத்துள்ள சாதனைகளே அவருக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி மிக முக்கிய பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.