ஆஸ்கர்: எமிலியா பெரெஸ் படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

Dinamani2f2025 01 232fy8csgy8h2femilia.jpg
Spread the love

பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய எமிலியா பெரெஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருவது ஒருபுறம் இருந்தாலும், அகாதெமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை ஆஸ்கர் இன்று வெளியிட்டுள்ளது.

இதில் பிரெஞ்சு திரைப்படமான எமிலியா பெரெஸ், அதிகபட்சமாக 13 பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ளது. திருநங்கையான கர்லா சோஃபியா காஸ்கன் (Karla Sofía Gascón) சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் முதல்முறையாக ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளார். மேலும் அதிக பிரிவில் பரிந்துரையான ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் இதுவாகும்.

எமிலியா பெரெஸ் படத்துக்கு அடுத்தபடியாக அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஜான் எம். சூ இயக்கிய விக்டு திரைப்படம் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பிராடி கார்பெட் இயக்கிய தி புரூட்டலிஸ் திரைப்படமும் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படங்கள் பிரிவில் அனோரா, தி புரூட்டலிஸ்ட், எ கம்ப்ளீட் அன்நோன், கான்கிளேவ், டுன் -2, ஐ ஆம் ஸ்டில் இயர், நிக்கல் பாய்ஸ், விக்டு ஆகியவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *