இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெல்பர்னில் வாழும் இந்தியர்களுக்காக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா வென்ற உலகக் கோப்பையுடன் சுய புகைப்படம் எடுத்துக்கொள்ள அனைவருக்கும் வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, பிக் பாஷ் லீக் மற்றும் மகளிர் பிக் பாஷ் போட்டிகளுக்கான பொருள்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்களையும் வழங்கி ஹோலி கொண்டாட்டங்களை மேலும் வண்ணமயமாக்கியிருக்கிறது ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!