இன்னும் சொல்லப்போனால், தொண்டை வலியுடன் மருத்துவர்களை அணுகுபவர்களுக்குக்கூட நாங்கள் உப்புத் தண்ணீரில் வாய்க் கொப்பளிப்பதை அறிவுறுத்துவதில்லை. ஏனெனில், ஏற்கெனவே உப்பானது, மியூகோசா (Mucosa) எனப்படும் சளிச்சவ்வை எரிச்சலடையச் செய்யலாம். அதற்கு பதில் உப்பு சேர்க்காத, வெதுவெதுப்பான நீரில் வாய்க் கொப்பளித்து, துப்பிவிடுவது சிறந்தது. மிக முக்கியமாக, உடலில் நீர்ச்சத்து குறையாதபடி, தொண்டைப்பகுதி வறண்டு போகாதபடி நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் திரவமாக அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கலாம்.

ஆஸ்துமாவுக்கு இன்றுவரை நிரூபிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை என்றால் இன்ஹேலர் மருந்துகள்தான். அதற்கு மாற்று என்பதே கிடையாது. மருத்துவ ஆலோசனையோடு கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகளை இன்ஹேலர் வழியே எடுத்துக்கொள்வதுதான் பலன் தரும். காற்றுக்குழாய்களை விரிவடையச் செய்கிற பிராங்கோடைலேட்டர் உள்ளிட்ட மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார். இதுதான் தீர்வு என்பது தெரியாமல், பலரும் தவறானதும் பலனற்றதுமான பல சிகிச்சைகளைப் பின்பற்றி, ஆஸ்துமா குணமாகாமல் போராடுகிறார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.