ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

dinamani2F2025 09 012F55x2m08d2FAha kalyanam akshaya engagement ed
Spread the love

ஆஹா கல்யாணம் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை அக்‌ஷயாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. தனது நீண்ட கால நண்பரையே அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

சமீபத்தில் அக்‌ஷயாவுக்கு தனது நண்பருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதனால், ரசிகர்கள் பலர் அக்‌ஷயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை அக்‌ஷயா கந்தமுதன் நாயகியாகவும் விக்ரம் ஸ்ரீ நாயகனாகவும் நடிக்கின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி மெளனிகா, விபிஷ் அஷ்வந்த், காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, ஆர்.ஜி. ராம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் தொடருக்கான ரசிகர்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதில், மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் அக்‌ஷயா நடித்து வருகிறார். தனது உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த அக்‌ஷயா, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.

சமீபத்தில் தனது நண்பருடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

akshaya kandamuthanoffi 1756404869 3709315350366643370 22592077279
திருமண நிச்சயதார்த்தத்தின்போது…

இதன்மூலம் அக்‌ஷயாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தனது நீண்டகால நண்பரான ஜைனு ஜெய் என்பவரை அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இதனை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அக்‌ஷயா, என்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை என்னுடைய நண்பனுடன் கழிக்கவுள்ளேன் எனப் பதிவிட்டு நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்ன திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | புதிய தொடரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

Actress Akshaya Kandamuthan got engaged to her long-time best friend, Jainu Jai

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *