இக்கட்டான சூழலில் 169 பயணிகளை காப்பாற்றிய இளம் விமானி | Young pilot saves 169 passengers in critical situation

Spread the love

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்து சாதனை படைத்துள்ளார் 23 வயது இளம் விமானி தீபிகா அதானா.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் திகான் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமானியாகப் பணியாற்றும் தீபிகாவுக்கு, மார்ச் 6-ம் தேதி காலை திடீரென ஒரு அவசர உத்தரவு வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா பகுதிக்குச் சென்று, அங்குள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்பதே அந்தப் பணி.

போர்க்களம் போன்ற சூழல் நிலவியதால், புறப்படுவதற்கு முன் தனது தாயிடம் பேசிய தீபிகா, “அம்மா, பை பை. நான் மீண்டும் உயிருடன் வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார்.

தீபிகா அதா

தீபிகா அதா

முதலில் இந்த விமானத்தை தீபிகாவின் தோழி இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தீபிகா அந்தப் பொறுப்பை ஏற்றார். கேப்டன் ஜஸ்விந்தர் கவுர், தீபிகா அதானா மற்றும் நான்கு பெண் பணியாளர்கள் என முழுவதுமே பெண்களைக் கொண்ட குழுவினர் இந்த ஆபத்தான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போர் பயம் இருந்தாலும், உரிய பாதுகாப்பு குறித்த நம்பிக்கையுடன் அவர்கள் விமானத்தைச் செலுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *