இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் பும்ரா, முழு உடல்தகுதி பெறுவதற்கான சிகிச்சையில் உள்ளார்.