இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தனது பதவியிலிருந்து விலகினார். இதனால், இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வியெழுந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக 26 வயதான இளம்வீரர் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.