பட மூலாதாரம், Getty
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்தியக் கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து 3-1 எனும் கணக்கில் வென்றுள்ளது.
இந்த கடைசி டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளே முடிவடைந்து விட்டது.
சவுத்ஹாம்ப்ட்டன் நகரில் நடைபெற்ற போட்டியில், இந்தியா 266 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மான்செஸ்ட்டரில் நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது.
மற்ற இரு போட்டிகளில், இந்தியா ஒன்றில் வென்றது மற்றொன்று இரு அணிக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 148 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டத்தில் 94 ஓட்டங்களும் எடுத்தன.
இங்கிலாது அணி தமது முதல் ஆட்டத்தில், 486 ஓட்டங்களை எடுத்தனர்.
இந்தத் டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் மிகவும் மோசமாகவே ஆடினர் என்றும், அணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்றும் வர்ண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
அடுத்ததாக இந்திய அணி 50 ஓவர்களக் கொண்ட ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும், 20 ஓவர்களைக் கொண்ட ஒரு போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிராக ஆடவுள்ளனர்.