நடிகர் பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தமன். இடைவெளிவிட்டு தமிழிலும் இசையமைத்து வருகிறார். நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்து வரவேற்பையும் பெற்றார்.
இவர் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். முக்கியமாக, இறுதியாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களுக்கு பின்னணி இசைக்காக கவனம் பெற்றார்.