2026ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் எந்தந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.

- பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.
- மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
- முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டது.
- ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன. மகளிருக்காக இளஞ்சிவப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது.
- 19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர். திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
- விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முதல்வர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகளிர் பெயரில் பதிவாகும் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான பத்திரப் பதிவுகளுக்கு, பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.71 லட்சம் பெண்கள் பத்திரப் பதிவு கட்டண குறைப்பால் பயன்பெற்றுள்ளனர்.
- தொழில் முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 36 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 13.3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. விழுப்புரம், தஞ்சாவூர், வேலூர், காரைக்குடி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு 4882 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் மூலம் 17 லட்சம் பேய் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம்” திட்டத்தில் 5.11 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.4,000 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணமாக ரூ.1,512 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.902 கோடியில் கோவை, நெல்லை, திருச்சியில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6,75,885 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
- செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
- மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு; கடந்த 5 ஆண்டுகள் ரூ..6,121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ரூ..361 கோடியில் 3,673 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
- அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
- இதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
- புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.