விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் இணையத் தொடராக உருவாகிறதாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இக்கதாபாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார். விக்ரம் படத்திற்குப் பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து இணையத் தொடர் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. இத்தொடரை வேறு ஒருவர் இயக்குகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இத்தொடர் ஏஜெண்ட் டீனா என்பவர் யார், விக்ரம் படத்தில் குறிப்பிடப்பட்ட 1987 ஆம் ஆண்டில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை மையமிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது…ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!