இண்டியன்வெல்ஸ்: அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி!

Dinamani2f2025 03 162f0ja3dcpw2fbnb.jpg
Spread the love

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் போட்டித் தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் அல்கராஸை போட்டித் தரவரிசையில் 13ஆவது இடத்தில் இருக்கும்பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் 6-1, 0-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சாதனையை இழந்த அல்கராஸ்

இந்தப் போட்டியில் டிரேப்பர் அல்கராஸின் ஏடிபி 1,000 நிகழ்வில் அவரது 16 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றதுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அல்கராஸ் இளம் வயதில் ஏடிபி நிகழ்வில் 3ஆவது முறையாக வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

கடந்தாண்டு ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் வாகை சூடியதும் குறிப்பிடத்தக்கது.

மெத்வதேவ் தோல்வி

மற்றுமொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 12ஆவது இடத்தில் இருக்கும் ஹோல்கர் ரூனே போட்டித் தரவரிசையில் 5ஆவது இடத்திலிருக்கும் டேனியல் மெத்வதேவை 7-6, 6- 4 என வென்றார்.

இதன் மூலம் ஓபன் இறுதிப் போட்டியில் ஹோல்கர் ரூனே, ஜேக் டிரேப்பா் மோதவிருக்கிறார்கள்.

இந்தப் போட்டி நாளை (மார்ச்.17) அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

மகளிர் பிரிவில்

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அா்யனா சபலென்கா மற்றும் 17 வயதான ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களது போட்டி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *