`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' – எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

Spread the love

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.

 எப்ஸ்டீன் - ட்ரம்ப்
எப்ஸ்டீன் – ட்ரம்ப்

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.

அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.

இந்நிலையில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் குறித்து NPR என்ற ஊடகத்திற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதில், “எப்ஸ்டீன் ஃபைல்ஸில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெலிண்டா கேட்ஸ்
மெலிண்டா கேட்ஸ்

இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உட்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

எந்த சிறுமிக்கும் ஏற்படவே கூடாத ஓர் அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டிருக்கிறது.

என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *