“இது இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்”- எம்.பி ஜோதிமணி| “This is something that could threaten Indian farmers as well” – MP Jothimani

Spread the love

அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா.

அதேபோல அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி என அறிவித்திருக்கும் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மோடி, ட்ரம்ப்

மோடி, ட்ரம்ப்

இந்த விவகாரம் உலக அளவில் பேசுப்பொருளான நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்த்து வருகின்றன.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “இந்தியா ஒரு காலனி அல்ல. ட்ரம்ப் அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்:

*அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்த வரி: 15–70%

* இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி: 2–3%

இந்த“ஒப்பந்தத்துக்குப்” பிறகு

* அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரி: பூஜ்ஜியம்

* இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி: 18%

* இது பேச்சுவார்த்தை அல்ல.

* இது முழுமையான சரணடைதல்.

அமெரிக்கா இப்போது புதிய கிழக்கு இந்தியா கம்பெனியாக இந்தியாவில் நுழைய மோடி அரசு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்தியாவின் செல்வத்தையும் எதிர்காலத்தையும் அமெரிக்காவின் காலடியில் ஒப்படைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *