சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சீரியல் நடிகை லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று டிவி தொடர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டு, இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவரது வீட்டில் படுக்கை அறையில் சீரியல் நடிகை உடை மாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது யாரோ ஒருவர் ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பது தெரிந்து சீரியல் நடிகை அதிர்ச்சியடைந்தார்.
உடனே வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குருணா சிங் (41) என்பது தெரிய வந்தது. அவரை சீரியல் நடிகை கண்டித்துள்ளார். அதனால் அங்கிருந்து முன்னாள் ராணுவ வீரர் ஓடிவிட்டார்.
தான் உடை மாற்றுவதை எட்டி பார்த்தது தொடர்பாக சீரியல் நடிகை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் குருணா சிங்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சீரியல் நடிகை வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரை குருணா சிங் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்ததாகவும் பல முறை சீரியல் நடிகை எச்சரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
