“இதைதான் மதுரை மக்கள் கேட்கிறார்கள்” – முதல்வர் ஸ்டாலின் |“This is what the people of Madurai are asking for” – Chief Minister Stalin |

Spread the love

உச்சியில் இருக்கும் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்ய திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. தற்போது மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.

இதற்கிடையில், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாததே காரணம் எனவும் மத்திய அரசு கூறியது.

மதுரை - மெட்ரோ

மதுரை – மெட்ரோ
கோப்புப்படம்

மத்திய அரசின் இந்த நிராகரிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. அதே நேரம், பாஜக-வினர் 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக – அதிமுக ஆட்சி அமைத்தால் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் கொண்டு வருவோம் எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! – இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *