இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர்.
இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்ளிக்கிழமை விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்தது.
அதில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விமானத்தின் தீப்பிழம்புகள் அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் கடந்து சென்ற 2 வாகனங்களுக்கும் பரவியது. மற்ற வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டன.
இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். மற்றொரு நபர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தியா – நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?
அவசரகால குழுவினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். விமான விபத்தில் பலியானவர்கள் வழக்கறிஞர்(75) செர்ஜியோ ரவாக்லியா மற்றும் அன்னா மரியா(50) என அடையாளம் காணப்பட்டனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.