ஜியூலியா கோர்டீஸ் என்ற பத்திரிக்கையாளர், இத்தாலிய பிரதமர் மெலோனியை உருவக் கேலி செய்ததற்காக நீதிமன்றம் இழப்பீடு வழங்க தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜியூலியா கோர்டீஸ், முன்னாள் பாசிச தலைவர் முசோலினியின் படத்துடன் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஜியார்ஜியா மெலோனியின் சித்தரிக்கப்பட்ட படத்தைச் சேர்த்து வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கோர்டீஸ் தனது எக்ஸ் பதிவில், “ஜியார்ஜியா மெலோனி, நீங்கள் என்னை பயமுறுத்த வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் 1.2 மீ (4 அடி) உயரம் மட்டுமே. உங்களைப் பார்க்கக் கூட முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கோர்டீஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, 1,200 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், மெலோனியின் உயரம் 1.58 மீ முதல் 1.63 மீ வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.