இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

dinamani2F2025 09
Spread the love

மெலோனி பொறுப்பேற்றால், அவர் எப்படி செயல்படுவார் என்று பத்திரிகைகளும் அரசியல் ஆய்வாளர்களும் சந்தேகம் கொண்டனர். இருப்பினும், அவர் தனது நாட்டுக்கு வலிமையையும் நிலைத்தன்மையையும் வழங்கியுள்ளார். உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதில் அவர் உறுதியாக உள்ளார்.

பிரதமர் மெலோனியின் எழுச்சி மற்றும் தலைமைப் பண்பை பாராட்டுவதற்கு நிறைய இருக்கின்றன. அவரது வாழ்க்கைக்கும், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கப்படும் தெய்வீக பெண் ஆற்றலான நாரி சக்திக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன்.

உலக அரங்கில் தனது நாட்டை வழிநடத்துவதற்கு, அவர் உறுதியான வேர்களைக் கொண்டுள்ளார். மெலோனியின் இந்த சுயசரிதை, ஐரோப்பா மற்றும் உலகின் ஆற்றல்மிக்க துடிப்பான தலைவர்களுள் ஒருவரின் இதயம் மற்றும் மனதைப் பற்றியது’’ என்று முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இத்தாலி ஆகிய இரு நாடுகள் மட்டுமின்றி, இரு நாட்டின் பிரதமர்களான மோடி மற்றும் மெலோனி ஆகியோருக்கு இடையேயும் நீண்டகால நட்புறவு இருந்து வருகிறது.

தங்கள் இருவரின் பெயர்களையும் சேர்த்து, மெலோடி என்றும் இத்தாலி பிரதமர் மெலோனி சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரூர் பலி: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் விசாரணைக் குழு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *