"இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!"- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்

Spread the love

‘பராசக்தி’ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்....
திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்….

இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“சினிமாவில் நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஆனால் அதைத் தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும்.

அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடம் இருந்து எந்த மாதிரியானப் படத்தை எதிர்பார்க்கிறார்களோ… அந்த மாதிரியான படமாக அது இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *