இந்தாண்டு பேசு பொருளான சினிமா நிகழ்வுகள் இவை தான்! |These are the hottest cinema events this year!

Spread the love

* கன்னடத்தில் சிக்கலைச் சந்தித்த தக் லைஃப்:

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்தின் புரொமோஷனில் கமல்ஹாசன் “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது’ என்று கூறிய கருத்தால் கர்நாடகாவில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க மறுத்தார். இதனால் இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

* காந்தாரா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்:

IFFI 2025 நிகழ்ச்சியில் பல இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் மேடையில் பேசிய நடிகர் ரன்வீர் சிங், `காந்தாரா’ திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல் பாவித்ததும், படத்தில் வரும் பெண் தெய்வ கதாபாத்திரத்தைப் பெண் பேய் என்று குறிப்பிட்டதும் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. அதன் பின் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

* பணி நேரம் குறித்து பேசிய நடிகை தீபிகா படுகோனே:

இந்த ஆண்டு நிறைய தொழிலதிபர்களும், பிரபலங்களும் ஒரு நாளின் சராசரி பணி நேரம் குறித்து பேசி வந்தனர். அந்த வரிசையில் நடிகை தீபிகா படுகோனேவும் சினிமாவில் பணி நேரம் குறித்து பேசியிருந்தார். ‘ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி நேரம் மனித உடலுக்கும், மனதுக்கும் போதுமானது’ என்றார் அவர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதன் பிறகு அவர் அடுத்தடுத்து கைவசம் வைத்திருந்த திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *