இந்தியப் பெருங்கடலில் 335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது: இலங்கை கடற்படை விசாரணை | Drugs worth Rs 335 seized near Indian Ocean

Spread the love

ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த ஓர் ஆழ்கடல் மீன்பிடி இலங்கை கடற்படையினர் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமுக்கு கொண்டு வந்தனர்.

படகில் 16 சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 கிலோ மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருள் , 85 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு மட்டும் ரூ.100 கோடி என்று கணக்கிடப்படப்பட்டுள்ளது. மேலும் இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *