இந்தியர்கள் நாடு கடத்தல்: நாடாளுமன்றத்தில் அமளி! அவைகள் ஒத்திவைப்பு!

Dinamani2f2025 02 062fns1lapqn2fgjfnbpoauaa6jjq.jpg
Spread the love

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், இந்தியர்களின் கை, கால்களை கட்டி அமெரிக்க ராணுவம் அழைத்து வந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தலைநகர் தில்லியில் அமெரிக்க விமானத்தை தரையிறக்காமல், பஞ்சாபில் தரையிறக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க : சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கியது, பகல் 12 மணிக்கு அவைகள் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *