இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் இதுதான்; முன்னாள் கேப்டன் விளக்கம்!

dinamani2F2025 09 122Fwwsk3y6f2FGyj9n9XWYAABf9V
Spread the love

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைவதற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 12) அதன் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், உணர்ச்சிவசப்படுவதால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி அடிக்கடி தோல்வியடைவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அதிகப்படியான எதிர்பார்ப்பிலோ அனைத்து விஷயங்களும் சரியாக ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக போட்டியை நாங்கள் ஆழமாக எடுத்துச் செல்வதில்லை. இதன் காரணமாகவே, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அடிக்கடி தோல்வியடைகிறது. ஆனால், இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் சூழலுக்கேற்ப விளையாடுகிறார்கள். அதனால், அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 15 போட்டிகளில் 12 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The former captain of the Pakistan team has spoken about the reason behind the team’s defeat in matches against India.

இதையும் படிக்க: ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் நிர்வாணமாக திடலை வலம் வருவேன்: மேத்யூ ஹைடன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *