இந்தியாவிடம் 40 நாள்களுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் கையிருப்பு: ரஷ்ய இறக்குமதியை அதிகரிக்க முடிவு | India has only 40 days of crude oil reserves: Decision to increase imports from Russia

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும்.

இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது.

எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும்.

இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

40 நாட்களுக்குக் கையிருப்பு

தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது.

குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத “அபராத’ வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *