உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா – இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி,

இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன!
“கடந்த எட்டு தசாப்தங்களாக, உலகம் ஏராளமான ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மனிதகுலம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியா – ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரத்தைப் போல உறுதியாக உள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையில் நிற்கும் இந்த உறவு எப்போதும் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது.
இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வுடன் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு கண்டுபிடிப்புகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும்.
அதோடு, யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு FTA (Free Trade Agreement)-வை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பும் பாடுபடுகின்றன.