இந்தியா – அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ” நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது!
நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர்.!
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் வரப் போகும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு. உலகில் இரண்டு வெவ்வேறு நாடுகளில் நடக்கும் விவகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதுதான் கேயாஸ் தியரியின் தத்துவம்! இந்த கேயாஸ் தியரி, பிரதமர் மோடியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது.
அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல் கடந்த 30-ஆம் தேதி வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.