இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு

Dinamani2f2024 12 112f4xvb9z9w2famazon.jpg
Spread the love

இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 8,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை நிறுவனத்தின் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை அதிகரிக்கும் எங்களது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததையடுத்து ஏற்கெனவே நிர்ணயிக்கபட்டிருந்த ஏற்றுமதி இலக்கை நான்கு மடங்காக்கியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *