தங்க நகை அடமானக் கடன் குறைந்தது 8 சதவிகித வட்டியில் இருந்து கிடைக்கிறது. ஆனால், தனிநபர் கடனின் குறைந்தபட்ச வட்டி விகிதமே 10 சதவிகிதம்.
குறைந்த வட்டியில், நல்ல தொகை கிடைப்பதால், பெரும்பாலான மக்கள் தங்க நகை அடமானக் கடன் பக்கம் செல்கின்றனர்.
இது பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கும் மிக முக்கிய காரணம் ஆகும்.
தங்க நகை அடமானக் கடனில் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இந்திய குடும்பங்களில் கட்டாயம் தங்கம் இருக்கும். இன்னொரு பக்கம், இந்திய மக்களுக்கு நீண்ட காலமாக தங்க நகை அடமானக் கடன் பழக்கம்.
அதனால், அதிக வட்டியோடு அதிக ரிஸ்க்கில், தனிநபர் கடன் வாங்குவதைத் தவிர்க்க நினைக்கின்றனர்.
ஆனால், அதிக தங்க நகை அடமானக் கடனுக்கு, விலை உயர்வும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்போது தங்க நகை அடமானக் கடனை வாங்கலாமா?
தங்க நகை அடமானக் கடன் இப்போது வாங்கும்போது, அதிக தொகை கிடைக்கலாம். ஒருவேளை, சில நாள்களில், தங்கம் விலை குறைந்தால், கடன் வாங்கி இருக்கும் தொகையின் மதிப்பிற்கு மீண்டும் தங்கம் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.
இதை தவிர்க்க, தங்க நகை அடமானக் கடனை வாங்காமல் இருப்பது நல்லது.