வாஷிங்டன்: இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை ஏற்படுத்தின.
இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.