`இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாது…’
பெட்ரோல் போன்ற உயிர் எரிபொருட்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படுதல், சூரிய, காற்று மற்றும் உயிர் ஆற்றல் போன்ற உள்நாட்டுப் புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மாறுதல் போன்றவை பொருளாதாரத்துக்கும் ஆற்றல் பாதுகாப்புக்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரசு உணர்ந்துள்ளது.
ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயு, உயிரி எரிபொருட்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் கீழ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) சூரிய ஒளி, காற்று மற்றும் உயிரி எரிசக்தி (Bioenergy) ஆகியவற்றில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

கலப்பு எரிபொருள் திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, பெட்ரோலில் ‘எத்தனால்’ (Ethanol) மற்றும் டீசலில் ‘பயோ-டீசல்’ கலப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எரிசக்தித் துறையில் சுயசார்பை அடைய, ஆண்டுக்குக் குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் (5 MMT) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிக்கவும், நாடு முழுவதும் மாற்று எரிபொருள் நிலையங்கள் (Alternate Fuel Stations) மற்றும் சார்ஜிங் மையங்களை நிறுவவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில், ‘எரிசக்திப் பாதுகாப்பு’ (Energy Security) உறுதி செய்யப்படும்” என்றார்.